மஞ்சத்தின் மறுபக்கம்
மார்கழிக் குளிர் சூடுதடி
மலராத காலையும்
மனம் இறுக வாட்டுதடி
முத்தங்களின் மிச்சங்களில்
மெல்லிதழ் மெல்ல வரளுதடி
மேனி உன் மென்மை தேடி
மெத்தையில் உடல் புரளுதடி
மயிர் மறைத்த மச்சத்தை
மத்த தொடையிடையில் தேடுதடி
மனம், தீராத உடல்
மோகத்தில் உயிர் வாடுதடி
மேகம் கறுக்கும்
மழைக்கால மாலையில்
மேனியிரண்டாய் புரள்கின்ற வேளையை
மூடாத வெட்கம் களைந்து
மீளாது மார்பில் திளைத்திட வேண்டுமடி
மழைக்காதலன் (28-04-2023)
Comments