ஒன்றிரண்டு இல்லையடி ஓராயிரம்
அகம் அடக்கிய ஆசைகள்..
அன்பும், அறிவும் கொடுத்தது கொஞ்சம்
காதலும் காமமும் கொடுத்தது கொஞ்சம்..
கொண்டதெல்லாம் முத்துக்களென நம்பியிருந்தேனடி,
பகிர்ந்ததில் ஒன்று வெறும் கல்லென்று காணும்வரை..
முத்துக்களாய் பாவிக்கும் கற்களை பயக்கிறேன்,
ஆசைகளை பகிரவும் மறுக்கிறேன் நான்,
அன்பில் திளைத்த முத்துக்கள், அத்தனையும்
ஆழப்புதைக்கிறேன், கல்கொண்டு மறைக்கிறேன்,
கல்நீக்கி புதையலாய் என் காதலை காணும் நாள்
வரும் வரை... காத்திருக்கிறேன் நான்.
댓글