நிழலொத்து நடந்தேன், உந்தன்
நினைவுகளில் நிலையாய் வாழ்ந்திட...
விரல்பற்றிக் கொண்டேன், விழும்
வான் மழையில் திளைத்தாடிட...
காதல் கொண்டேன் பெண்ணே
நின் அன்பில் அமிழ்ந்திட
துன்பத்தில் தோள் சாய்ந்திட...
பந்தங்களை இறுதியில் பிரியும்
வரையிலும் உன் பாதியாய் வாழ்ந்திட...
08-05-2023
Comments