எல்லாவுமாய் ஏதுமற்ற
உறவின் பெயர் வரம்பில் இல்லாத காதல்
வளர்தலின் பரிணாம மாற்றம்
உறவுக்கும் இருக்கட்டுமே
இணையாகவும் துணையாகவும்
இளம் காலை அரவணைப்பில் துணை
துயில் களையும் சீண்டல்களில் இணை
ஒத்த தேநீர் குவளையில் காதல் பகிர துணை
குளித்து கூந்தல் சிந்தும் துளியை முகத்தில் வீச இணை
பலுகூடிய வேலையின் நடுவே கரிசனம் துணை
தனிமையில் திருடி அனுப்பும் முத்தங்கள் இணை
மாலை வான் வண்ணங்களில் காதல் படர துணை
மாலை மங்க காமம் தூண்ட இணை
நெஞ்சோடு சேர்ந்து தலை கோதும் விரல்கள் துணை
என்முதுகின் கீரல்களில் இணை
இதழோடு கொஞ்சும் முத்தங்கள் துணை
இடையோடு இடை மோதும் மோகம் இணை
ஒன்றின்றி வேறில்லை
இணையாகினும் துணைதேடும் நிமிடங்கள்
துணையாகினும் இணைவிழைந்த வருடங்கள்
வளர்தலில் பரிணாமம் கொள்ளட்டுமே காதல்.
Comments