இரவின் மடியில் துயில்கொண்டு
வளைவுகளில் துளிகள் வருட
காலையின் தீண்டலில் மலரும் மொட்டு போல்,
என் அணைப்பில் தினம்
விடரும் அழகாய் நீ…
மெல்லிதழும் மேன்மேனியும்
தீண்டலின் வாடும் நளினமும்
காதலின் அன்பின் மகிழ்ச்சியாய்
காமத்தில் பரிசத்தில் கசங்கிடும்
மலரோடு மலராய் நீ…
மலரின் மடியில் தேங்கும்
தேனை, முள்முனையை கடந்து
பகிரும் தேன்சிட்டு போல்,
சிவன் கழுத்தில் வாசுகியாய்,
நின் கால்கள் என்சிரம் தழுவ
கால்கொலுசுகள் மலர்முள்ளாய்
அழுத்த, இன்னிதழ் கொண்டு
நின்னிதழில் தேன் ஊற்றி
பருகும் பக்ஷியாய் நான்.
தினம் மாலை வாடினாலும்,
காலை மணம் சிதறி, ஒவ்வொரு
ஸ்பரிசமும் முதல் தீண்டல் போல்,
ஒவ்வொரு பார்வையும் முதல்
அனுபவம் போல், வாடாமலராய் நீ
வாடா மென்மை, இரவின்
அணைப்பில் காதலின் ஊடலில்
கலந்து, காமத்தின் வன்மையில்
துவண்டு, நெஞ்சில் மெல்ல
சொருகும் மலராய் நீ,
மலர்சூடி, மலர்பனியில் குளித்து,
மழை தீண்டா மலர்த்தேன் பருகி,
மென்மயிலும் வன்மையிலும் நின்
புன்னகை காக்கும் கவிஞனாய் நான்…
- மழைக்காதலன்
Comentarios